முக்கியச் செய்திகள் இந்தியா

கேரளா கனமழை; இதுதான் காரணம்

கேரளாவில் கனமழை காரணமாக 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், கனமழை மற்றும் திடீர் வெள்ளத்திற்கான காரணத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக கோட்டயம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையினால் கடும் பாதிப்பை எதிர்கொண்டது. இந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். சிலரை காணவில்லை.

கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது மழை குறைந்துள்ள நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான் காரணம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போல் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் சாதக போக்கின் காரணமாக (Easterly winds ) அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழகம் கேரளா உள்ளிட்ட தெற்கு தீபகற்பப் பகுதிகளில் மழையின் தீவிரம் இயல்பை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கன மழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கையை திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

50% ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும்: புதுச்சேரி அரசு!

Halley Karthik

”முதல் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொள்வேன்”- அமைச்சர் பாண்டியராஜன்!

Jayapriya

கொரோனா காலத்திலும் பொருளாதார எழுச்சி…!

Nandhakumar