அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இல்லங்களில் ரெய்டு-அண்ணாமலை கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜய பாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில்…

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜய பாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக ஆட்சியின் மேல் மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருவதை திசை திருப்பும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருவதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

இதற்கு முன்னர் செய்த சோதனைக்கே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலிருக்கும்போது புது சோதனைகளின் அடிப்படை நோக்கம் என்ன ?
திமுக அமைச்சர்கள் மீது குவியும் ஊழல் புகார்களை இருட்டடிப்பு செய்ய அரசு இயந்திரங்களை ஏவல் இயந்திரங்களாக மாற்றி இருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு என்று அந்தப் பதிவுகளில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் என்னிடம் இருந்து இரண்டு கைபேசியை மட்டுமே கைப்பற்றினர் என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சோதனை என்றும் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் குற்றம்சாட்டியிருந்தார்.

தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, தான் அமைச்சராக பணியாற்றிய 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கிராமப் புறங்களில் ஏற்கனவே உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.