முக்கியச் செய்திகள் சினிமா

சந்திரமுகி 2 படத்திற்குத் தனது உடலை மெருகேற்றிய ராகவா லாரன்ஸ்

தனது ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்.

நடிகர் ராகவா லாரன்ஸ் பி வாசு இயக்கத்தில் தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காகத் தனது உடலை ராகவா லாரன்ஸ் மெருகேற்றி உள்ளார். அந்த புகைப்படத்தைத் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள அவர் மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக் கை வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் “அனைவருக்கும் வணக்கம், இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும். இரண்டாவதாக, இத்தனை ஆண்டுகளாக என்னுடைய ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்”.

மேலும் ”நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதைச் செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளேன். இப்போது, ​​நான் நல்ல இடத்தில் இருக்கிறேன், மேலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறேன், இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, ( Larencce Charitable trust) அறக்கட்டளைக்கு உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனவும்

”உங்கள் ஆசீர்வாதம் மட்டும் எனக்கு போதும். இத்தனை வருடங்களாக நான் பெற்ற ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கிறேன். அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள் ” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மகனைச் சிகிச்சை அளிக்க வைத்துவிட்டு சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர்

Arivazhagan Chinnasamy

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து நின்று செல்லும் – மதுரை கோட்டம் தகவல்

Web Editor

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு சலுகை – 7 காவலர்கள் சஸ்பெண்ட்

Halley Karthik