செயலி மூலம் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை புதிய முயற்சி!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் வளரறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு…

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் வளரறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

செப்டம்பர் 19-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் செயலி வாயிலாக வளரறி மதிப்பீட்டுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் இந்த மதிப்பீட்டுத் தேர்வை பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை பல்வேறு முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.