முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை!

கல்குவாரி முறைகேடு புகார் தொடர்பாக மதுரையில் திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்தததாக கனிமவளத்துறை ஆய்வின் அடிப்படையில் கோட்டாச்சியரின் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சத்திரவெள்ளாளப்பட்டியில் குவாரி குத்தகைதாரர் ஒருவர், அனுமதி பெறாத நிலத்திலிருந்து சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக சரளைக் கற்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு முறையே ₹2.32 கோடி மற்றும் ₹3.07 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை அளித்துள்ளார்.

இந்த புகார்களின் அடிப்படையில், மதுரை மாவட்ட மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் இரு வழக்குகள் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான மதுரை அய்யர் பங்களா, எழில் நகர், ரோஜா வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் ஆதார சட்டவிரோத குவாரி தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பொருட்கள் உள்ளதா என்பது குறித்து முதலாவது நீதித்துறை நடுவர் தகவல் அளிக்கப்பட்டு தற்போது மதுரை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்

முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனையை தொடர்ந்து அவரது உறவினரான பாலமேடு பகுதியில் தன்ராஜ், அலங்காநல்லூர் பகுதியில் பொன்ராம், பூவந்தி பகுதியில் உள்ள ராஜாமணி ஆகியோரது வீடுகளிலும் மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

மேலும் எழில் நகர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் மற்றொரு வீட்டிலும் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.