தனக்கு முடி வெட்டிய நபருக்கு பரிசு அனுப்பிய #RahulGandhi!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனக்கு முடி வெட்டிய நபருக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு பரிசுகளை அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ்…

#RahulGandhi sent a gift to the man who cut his hair!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனக்கு முடி வெட்டிய நபருக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு பரிசுகளை அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னதாக இந்த தொகுதியில் கடந்த மே 13ம் தேதி பிரசாரம் செய்த அவர், பின்னர் அங்குள்ள பிரிஜேந்திர நகரில் உள்ள ஒரு சலூனுக்கு சென்று முடி வெட்டிக்கொண்டார். அப்போது ராகுல்காந்தி தனக்கு முடி வெட்டிய அந்த கடை உரிமையாளர் மிதுனிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ அப்போது வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனக்கு முடி வெட்டிய மிதுனுக்கு 2 நாற்காலிகள், ஒரு ஷாம்பூ மேஜை, இன்வெர்ட்டர் போன்றவற்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். ராகுல் காந்திக்கு முடி வெட்டி 3 மாதத்துக்குப்பின் இந்த பரிசை அவர் அனுப்பி வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மிதுன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இதற்காக ராகுல் காந்திக்கு நன்றியும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.