33.3 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

இந்திய ஒற்றுமைப் பயணத்தில் உயிரிழந்த தொண்டனுக்கு ராகுல் அஞ்சலி

இந்திய ஒற்றுமைப் பயணத்தில் உயிரிழந்த தமிழக காங்கிரஸ் தொண்டனுக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமைப் பயணம் தற்போது மகாராஷ்ராவில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் யாத்திரையில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் கணேசனுக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். மேலும் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் புகைப்படங்களோடு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

அந்த பதிவில் நமது சக யாத்ரி கணேசன் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். கடந்த 3 தசாப்தங்களாக காங்கிரஸின் ஒவ்வொரு யாத்திரையிலும், பிரச்சாரத்திலும் பங்கேற்ற அவர், காங்கிரஸின் உறுதியான தொண்டன். மேலும் கட்சியின் உண்மையான சிப்பாயையும், பாரத் ஜோடோ யாத்ராவின் அன்பான தோழரையும் நாம் இழந்துவிட்டோம்.

எனவே அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டிற்காகவும், காங்கிரஸ் கட்சிக்காகவும் அவர் காட்டும் அர்ப்பணிப்பு, நம் நாட்டை ஒன்றிணைக்கும் முயற்சியில் நம் அனைவருக்கும் உத்வேகமாக அமையும் என அந்த பதிவில் குறிபிட்டுள்ளார்.

ராகுல் காந்தியைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரியும் தனது இரங்கல் செய்தியைப் பதிவிட்டுள்ளார். அதில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணத்தில் தம்மை இணைத்துக்கொண்ட யாத்திரை கணேசன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட போது காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும்,துயரமும் அடைந்தேன். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இவர் இலக்கியச்செல்வர் குமரி அனந்தன் தலைமையில் நடைப்பெற்ற பல்வேறு நடைப்பயணங்களிலும், சமீபத்தில் நடைப்பெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்திலும் தம்மை இணைத்துக்கொண்டவர்.

தஞ்சை மாவட்ட சேவதனம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை ஏற்று, திருமணம் செய்துக்கொள்ளாமலேயே முழு நேர ஊழியராக கட்சியின் வளர்சிக்காக கடுமையாக உழைத்தவர். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். யாத்திரை கணேசனின் மறைவால் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும், தமிழ்நாடு காங்கிட்ரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துக்கொள்கிறேன் என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

– பரசுராமன்.ப 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram