ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி விடுதலை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தமது உணர்வுகள் குறித்து , நளினியின் தாயார் பத்மா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரும் விடுதலைக்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து 30 ஆண்டுகள் சிறையிலிருந்துவரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இவர்களின் விடுதலை குறித்து நளினியின் தாயார் பத்மா நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ‘ நளினியின் விடுதலைக்காக பாடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
மேலும், அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களைத்தாண்டி எத்தனையோ மனிதநேயம் படைத்த பலர் எங்களுக்காகப் போராடினர். அவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் விடுதலையாகும் இந்த ஆறுபேரும் அனைவருக்கும் ஒத்துழைத்து நல்ல முறையில் இருப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.
என் மகளும் நன்றாக படித்துள்ளார், அது அவருக்கு கைகொடுக்கும். என் மகள் நல்ல முறையில் வாழ வேண்டும் என விரும்புகிறேன் என்று அவருடைய விடுதலை செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.