முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல்

ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ராகுல் காந்தி எம்.பி. 2003 அக்டோபருக்குப் பிறகு ராஜீவ் நினைவிடத்திற்கு ராகுல் வந்துள்ளார். பல வருடங்கள் கழித்து தன் தந்தையின் நினைவிடத்திற்கு ராகுல்…

ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ராகுல் காந்தி எம்.பி.

2003 அக்டோபருக்குப் பிறகு ராஜீவ் நினைவிடத்திற்கு ராகுல் வந்துள்ளார். பல வருடங்கள் கழித்து தன் தந்தையின் நினைவிடத்திற்கு ராகுல் வருகை தந்தார். அமைதியாக அஞ்சலி செலுத்தி வருகிறார் ராகுல் காந்தி. கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமாரும் அவருடன் அமர்ந்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களும் அவருடன் உள்ளனர்.

மரக்கன்றையும் ராகுல் காந்தி நட்டார். இசையைக் கேட்டுக் கொண்டே அமைதியாக அவர்  அமர்ந்து தந்தை நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார்.

வெளி மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்களும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளனர். கன்னியாகுமரியில் இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் கட்சி ஒற்றுமை பயண பாதயாத்திரை துவக்க விழா நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர், சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பங்கேற்கிறார்கள்.

பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். டிஐஜி சத்யபிரியா தலைமையில் 400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேள தாளம் முழங்க கட்டக்கூத்து நடனத்துடன் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்க காங்கிரஸ் தொண்டர்கள் மட்டும் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தொலைவுக்கு 150 நாட்கள் பாத யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.