ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 72 ரன்கள் எடுத்தார். விராட் கோலி ரன்கள் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். சூர்ய குமார் யாதவ் 34 ரன்களும், ஹார்திக் பாண்டியா, ரிஷப் பன்ட் ஆகியோர் தலா 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
இவ்வாறாக இந்தியா 173 ரன்கள் எடுத்தது. இலங்கை சார்பில் தில்ஷன் மதுஷங்கா 3 விக்கெட்டுகளையும், கருணாரத்னே, கேப்டன் ஷனகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இலங்கை, 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் 57 ரன்களும், பதும் நிசன்கா 52 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் ஷனகா 33 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய தரப்பில் யுவேந்திர சஹல் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்திய அணியின் அதிர்ச்சி தோல்வி காரணமாக இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு முடிந்துவிட்டது. நாளை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடவுள்ளது.