மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து; சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீ விபத்து வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி செல்லும்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீ விபத்து வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி செல்லும் வழியில், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள சுமார் 36 கடையில் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு தொடரப்பட்டது.

தீவிபத்திற்கு யாரும் காரணம் இல்லை என வழக்கை கைவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிறகு,  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இந்த வழக்கை முடித்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் கோயிலின் 5 நுழைவு வாயில் மற்றும் கோயிலுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தீப்பெட்டி, சிகரெட், பீடி உள்ளிட்ட தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. இந்நிலையில், கடந்த 2018 பிப்ரவரி 2ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், வீரவசந்தராயர் மண்டபம் பெருமளவு சேதமடைந்தது. ரூ.52 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 56 சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி அரசுக்கு அளித்த அறிக்கையில், தீ விபத்துக்கும், சேதத்துக்கும் கோயில் இணை ஆணையர் மட்டுமே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகம விதிகளை பின்பற்றாமல் கோயில் வளாகத்தில் கடைகள் நடத்த அனுமதி வழங்கியதே தீ விபத்துக்கு காரணம். மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து தொடர்பாக கோயில் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.