கடவுள் ராமர் பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி

கடவுள் ராமர் பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோயிலுக்காக…

கடவுள் ராமர் பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோயிலுக்காக நிதி திரட்டும் பணியில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை நாடு முழுவதும் நிதி வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த அறக்கட்டளை பெயரில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இதில் மோசடி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கிடையே இந்த புகாரை அந்த அறக்கட்டளை மறுத்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான, ராகுல் காந்தி ராமர் பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில், கடவுள் ராமர் நீதி மற்றும் உண்மைக்கு நிகரானவர். அவர் பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.