முக்கியச் செய்திகள் தமிழகம்

டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து வரும் 16ம் தேதி தண்ணீர் திறப்பு!

டெல்டா பாசனத்திற்காக, கல்லணையிலிருந்து வரும் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் மூன்று, நான்கு நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் அதன்பிறகு கல்லணையில் முறைப்படி தண்ணீர் திறந்து விடப்படும். அது போல் இந்த ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார். இந்த தண்ணீர் 16ம் தேதி அதிகாலை தஞ்சை மாவட்டம் கல்லணை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு காலை 9.30 மணி அளவில் கல்லணையிலிருந்து முறைப்படி காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் நீர் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரலையில் ஒளிபரப்புவது பரிசீலனையில் உள்ளது: அப்பாவு

நீட் தொடர்பான வீடியோவை நான் பதிவிடவில்லை: அமைச்சர் க.பாண்டியராஜன் மறுப்பு

Gayathri Venkatesan

ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் வி.கே.சசிகலா?

Jeba Arul Robinson