தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிரொலித்த ராகுல் காந்தியின் தகுதி நீக்கம்!

ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிரொலித்தது.  தமிழக சட்டப்பேரவை கடந்த 20ம் தேதி மீண்டும் தொடங்கியது. 20ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல்…

ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிரொலித்தது. 

தமிழக சட்டப்பேரவை கடந்த 20ம் தேதி மீண்டும் தொடங்கியது. 20ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். தொடர்ந்து 21ம் தேதி வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரானது வரும் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அதிமுக உறுப்பினர் அக்னி கிருஷ்ணமூர்த்தி பேசிகொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், ஜனநாயக முறைப்படி உங்களை பேச அனுமதிக்கிறோம். ஆனால் பேசியதற்காகவே ராகுல்காந்தியை பதவியிலிருந்தே நீக்கியிருக்கிறார்கள் என கூறினார்.பிரதமர் மோடியின் பெயரை வைத்து அவமதிக்கும் வகையில் பேசியதற்காக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது குறிப்பிட்டத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.