எத்தனை சதி செய்தாலும் போராட்டத்தை ராகுல்காந்தி தொடர்வார்- காங்கிரஸ்

மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டாலும், க்களுக்கான போராட்டத்தை ராகுல்காந்தி தொடர்வார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019…

மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டாலும், க்களுக்கான போராட்டத்தை ராகுல்காந்தி தொடர்வார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,  “ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. உங்களுக்காகவும், இந்த நாட்டிற்காகவும் அவர் தொடர்ந்து போராடி வருகிறார். ஜனநாயகத்தை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்கிறார். எத்தனை சதி செய்தாலும், அவர் இந்த போராட்டத்தை எந்த விலை கொடுத்தும் தொடர்வார். போராட்டம் தொடர்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.