ஒற்றுமை நடைபயணத்தின்போது கிரிக்கெட் விளையாடிய ராகுல்காந்தி எம்.பி.

இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி எம்.பி. இன்று சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.   தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள்…

இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி எம்.பி. இன்று சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடைபயணம் மொத்தம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நடைபயணம் மூலம் ராகுல்காந்தி 3,570 கி. மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடைபயணத்தின்போது, ராகுல்காந்தி மேற்கொள்ளும் சில சம்பவங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றன. சில நேரங்களில் சாலையோரம் உள்ள கடையில் டீ குடித்து அங்கு இருப்பவர்களுடன் பேசி மகிழ்வார். சிறுவர்களுடன், மாற்றுத்திறனாளிகளுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார்.

வயது மூப்பு மூதாட்டிகளிடம் ஆசிர்வாதம் பெறுகிறார். சில நேரங்களில் நடந்து கொண்டே உடற்பயிற்சி செய்வதும், ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டதும் இணையதளங்களில் பரவி வைரலாகியது. மேலும் அவரது செயல்கள் பொதுமக்களிடம் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபயணத்தின்போது சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல்காந்தி அசத்தியுள்ளார்.

https://twitter.com/INCIndia/status/1587775237520691200

 

தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் இருந்து ஹைதராபாத் நோக்கி ராகுல்காந்தி இன்று நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, வழியில் சிறுவர்களுடன் அவர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். சிறுவன் ஒருவனுக்கு ராகுல்காந்தி பந்து வீசி விளையாடினார். இது தொடர்பான காங்கிரஸ் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், இன்றைய இந்திய – வங்கதேச கிரிக்கெட் போட்டியை காட்டிலும் இது கவர்ச்சிகரமான போட்டி என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய நடைபயணத்தின்போது, மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். அவரும் ராகுல்காந்தியும் சிறிது நேரம் உரையாடி கொண்டே நடைபயணத்தை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விவரங்களை பற்றி ராகுல்காந்தி மனம் திறந்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.