அவதார் படத்தின் 2-ம் பாகத்தின் டிரைலர் வெளியானது – டிசம்பர் 16-ம் தேதி படம் ரிலீஸ்

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படைப்பில் உருவாகியுள்ள அவதார் படத்தின் 2-ம் பாகத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் ரசிகர்கள்…

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படைப்பில் உருவாகியுள்ள அவதார் படத்தின் 2-ம் பாகத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, உலகளவில் வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது. மேலும், சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் இப்படம் ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. இந்த படத்தை ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார்.

வேற்று கிரகம் ஒன்றான பண்டோராவை மனித இனம் கைப்பற்றுவதே இப்படத்தை அடிப்படை கதையாகும். இதற்காக மனிதன் ஒருவன் நவி இனத்தின் ஆளாக மாற்றி அனுப்பப்படுகிறான். அங்கு செல்லும் அவன் நிலைமையை உணர்ந்து, பண்டோரா உலகத்தை காப்பாற்றப் போராடுவது மீதி கதையாகும். இந்த படத்தில் ஆச்சரிய மூட்டும் அளவில் விஷூவல் எபெக்ட்ஸ் இருந்ததால் அவதாரின் 2-ம் பாகத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு திரும்பியது.

 

https://twitter.com/officialavatar/status/1587781469191036928

 

இதனால் அவதார் 5 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 2-வது பாகத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தாண்டு டிசம்பர் 16-ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2-ம் பாகத்திற்கு அவதார் தி வே ஆப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 9-ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று டிரைலர் வெளியாகியுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.