தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தவெக சார்பில் செப்டம்பர் 9ம் தேதி, கூட்டணி கட்சித் தலைவர்களுடைய கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்தார்கள்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பங்கேற்க உள்ளது. தவெக இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் வேட்பாளர் என்பது முடிந்து போன கதை. பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான். கூட்டணியில் பிரச்சனை ஏற்படுத்துவதற்கு பல்வேறு ஊடகங்கள் செயல்பட்டு வருகிறது. கூட்டணிக்கு பெயர் வைத்து இந்த கூட்டணியை நல்ல முறையில் எடுத்துச் செல்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு ஒருமித்த கருத்துக்களை தெரிவிக்க கூடிய கூட்டணியாக இந்த கூட்டணி அமையும்.
இரண்டாவது கூட்டமாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. கடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக பங்கேற்றவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் ராகுல் காந்தி தான். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தெளிவாக தான் உள்ளார்கள். இதனை ஊடகங்கள் தான் பிரித்து பார்க்கிறது. இந்தியாவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுடைய பொறுப்பு. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்று தெரிவித்துள்ளார்.




