ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் பாஜகவிற்கு நல்லது – அண்ணாமலை

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான் என்றும், அவர் தலைவரானால் பாஜகவிற்கு நல்லது என்றும் காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி…

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான் என்றும், அவர் தலைவரானால் பாஜகவிற்கு நல்லது என்றும் காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு போன்றோர் ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் ஒரு குடும்பம், ஒரு பதவி என்ற விதிமுறையை மீறியது முதலில் ப.சிதம்பரம் குடும்பம்தான். என்னதான் காங்கிரஸில் தலைமை பதவிக்குப் போட்டி என்று மாய பிம்பத்தை உருவாக்கினாலும், ராகுல் காந்தி தான் தலைவராக வருவார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வந்தால் அது காங்கிரஸிற்கும் நல்லது,
பாஜகவிற்கும் நல்லது. ராகுல் காந்தி காங்கிரஸின் தலைவராக வந்தால் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 450 இடம் கிடைப்பது உறுதி என்றார்.

  • -ம.பவித்ரா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.