இன்று வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டை பார்வையிட மக்களவைஎதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று வயநாடு செல்கின்றனர். தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில்…

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டை பார்வையிட மக்களவைஎதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று வயநாடு செல்கின்றனர்.

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் இன்று வயநாடு செல்கின்றனர். முன்னதாக அவர்கள் நேற்று வயநாடு செல்ல இருந்த நிலையில் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளதால், பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று வயநாடுக்கு செல்லும் ராகுல்காந்தி, பிரியங்கா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். மேலும் நிவாரண முகாம்களுக்கு சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.