கம்பேக் கொடுக்கும் இசைப்புயல் – சியான்!

காதல், ஆக்‌ஷன், டிராமா, காமெடி, ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் என பல வகையான ஜானர்களில் புதுப்புது கெட்டப்புகளில் வந்து விருந்து வைத்தவர் நடிகர் சியான் விக்ரம். 2000த்தின் தொடக்கம் முதல் திரையில் இவர் செய்த சாகசங்களின்…

காதல், ஆக்‌ஷன், டிராமா, காமெடி, ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் என பல வகையான ஜானர்களில் புதுப்புது கெட்டப்புகளில் வந்து விருந்து வைத்தவர் நடிகர் சியான் விக்ரம். 2000த்தின் தொடக்கம் முதல் திரையில் இவர் செய்த சாகசங்களின் தாக்கத்தால் மற்ற முன்னணி நடிகர்களுமே கூட நீளமாக முடி வளர்ப்பது, உடலை வருத்தி நடிப்பது என புதுப்புது அவதாரங்களை எடுக்க தொடங்கினர்.

இதனையடுத்து அடுத்தடுத்து தொடர் தோல்விகளை அவர் சந்திக்க நேர்ந்தது. விக்ரமுக்கு கடைசியாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட் கொடுத்த படம் தெயத்திருமகள் தான். அதன் பிறகு வெளிவந்த ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், 10 எண்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச், சாமி square, கடாரம் கொண்டான், மஹான் என கடந்த 10 வருடங்களாக வந்த படங்களை அனைத்துமே தோல்விப் படம் அல்லது சுமார் ரகம் தான்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து விகரம் செய்யும் சம்பவம் தான் கோப்ரா. இப்படத்தில் நாயகியாக கேஜிஎஃப் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இர்பான் பதாந், கே.எஸ்.ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. கெட்டப்புகளுக்கு பெயர் போன விக்ரம் இதில் பல்வேறு அவதாரங்களை எடுத்திருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரஹ்மானின் கடந்த சில ஆல்பங்களுமே சுமார் ரகமாக பார்க்கப்பட்ட நிலையில் கோப்ராவுக்காக அவர் இசையமைத்த ஆதிரா பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ‘உயிர் உருகுதே’ எனும் காதல் ததும்பு மெலோடி பாடலின் மூலம் ரசிகர்களின் உயிரை உருக்கியுள்ளார் இசைப்புயல். இந்நிலையில் கோப்ரா படம் சியான் விகரம் – இசைப்புயல் ஏ.ஆர் .ரஹ்மான் ஆகிய இருவருக்குமே ஒரு கம்பேக் படமாக இருக்கும் எனக்கூறும் சினிமா ரசிகர்கள் ‘king’s returns எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.