முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்களிடம் வரவேற்பு : ராதாகிருஷ்ணன்

சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்திருப்பதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

பொதுமக்களிடமிருந்து சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், சிறப்பு முகாம் வெற்றி பெற்றுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார். கோவை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு வரவேற்பு இருந்ததாக தெரிவித்த ராதாகிருஷ்ணன், அரசிடம் ஆலோசனை நடத்தி அடுத்தடுத்து சிறப்பு முகாம்கள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபடும் எனவும் உறுதியளித்தார்.

 

Advertisement:
SHARE

Related posts

மாநில அரசின் செயல்பாட்டை பொறுத்தே கொங்குநாடு பரிசீலனை – வானதி சீனிவாசன்

Jeba Arul Robinson

பள்ளிகளில் ஆய்வுச் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்!

ஆட்டோவில் பரப்புரை மேற்கொண்ட கமல்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Saravana Kumar