முக்கியச் செய்திகள் சினிமா

சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி இணைந்து வெளியிட்ட ‘பார்டர்’ டிரைலர்

அருண் விஜய் நடித்துள்ள ’பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம், ‘பார்டர்’. ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் இந்தப் படத்தை அறிவழகன் இயக்குகிறார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இதில், சவாலான புலனாய்வு துறை அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ளார். அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ரெஜினா கசாண்ட்ராவும் புலனாய்வு அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரும் சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். பக்ஸ் என்ற பகவதி பெருமாள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக் கிறார்.

படத்தை, 11 :11 புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக், தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் வெளியிடுகிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கீழமை நீதிமன்றங்கள் வரும் 28-ம் தேதி முதல் செயல்படும்: உயர் நீதிமன்றம்

முதல்வரின் கோரிக்கையை நிறைவேற்றிய 3-ம் வகுப்பு மாணவன்!

சசிகலா அதிமுகவில் இணைக்கப்படுவாரா? -ஜெயக்குமார் பதில்

Niruban Chakkaaravarthi