உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் பதவியேற்பு!

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர். மகாதேவன், என். கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் இன்று பதவியேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை…

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர். மகாதேவன், என். கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். நேற்று முன்தின்ம( ஜூலை 16) இதற்கான அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 2 பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. தலைமை நீதிபதியையும் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் தற்போது 34 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர்.

இதே போல், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை  நீதிபதியாக கிருஷ்ணகுமார் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். புதிய தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டுள்ள பம்பாய் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான ஸ்ரீராம் பதவியேற்கும் வரை,  பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பதவி வகிப்பார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.