முக்கியச் செய்திகள் இந்தியா

குதுப்மினார் சர்ச்சை- மத்திய அமைச்சர் விளக்கம்

குதுப்மினார் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி விளக்கமளித்துள்ளார். 

டெல்லியில் உள்ள குதுப்மினார் வளாகத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்து மற்றும் ஜெயின் கோயில்களை மீட்டெடுக்கக் கோரியும், வளாகத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரியும் சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் டெல்லியிலுள்ள குதுப்மினாரை குத்புதீன் ஐபக் கட்டவில்லை என்றும் சூரிய ஒளியின் திசை பற்றி ஆராய்வதற்காக ராஜா விக்ரமாதித்யா கட்டியதாகவும் தொல்லியல் துறையின் முன்னாள் அதிகாரி கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதேநேரத்தில் 27 ஹிந்து கோயில்களை இடித்து அதிலிருந்து பெறப்பட்ட பொருட்களை வைத்து குதுப் மினார் கட்டப்பதாகவும் அது விஷ்ணுவின் தூண் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியிருந்தார்.

குதுப்மினார் வழக்கில் வரும் ஜூன் 9-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று டெல்லியில் உள்ள சாகேத் நீதிமன்றம் கூறியது. சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் குதுப்மினார் கோபுரத்தின் வளாகத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனை மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, குதுப்மினார் ஆய்வு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

ஞானவாபி மசூதி விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், டெல்லியிலுள்ள குதும்மினார் விவகாரத்திலும் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு: முதலமைச்சர்

Ezhilarasan

கருமுட்டை வழக்கு; சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை

Saravana Kumar

பருவமழையை எதிர்கொள்ள தயார் – தமிழ்நாடு தீயணைப்புத்துறை

Halley Karthik