வாராணாசியில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக விசாரித்த மாவட்ட நீதிமன்ற மூத்த நீதிபதி, மசூதி குழுவின் வாதத்தை முதலில் விசாரிப்பதாக தெரிவித்தார்.
மேலும், மசூதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து இரு தரப்பும் பிரமாணப்பத்திரத்தை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு வியாழக்கிழமை (மே 26) முதல் விசாரிக்கப்படவுள்ளது. “மசூதியில் வீடியோ பதிவு செய்ததன் மூலம் 1991ஆம் ஆண்டு சட்டம் மீறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நாட்டில் உள்ள எந்த வழிபாட்டுத் தலத்தின் தன்மை மாறுவதைத் தடுக்கிறது” என்று மசூதி கமிட்டி கூறியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாராணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சுற்றுச்சுவரில் உள்ள ஹிந்து கடவுள்களை வழிபாடு செய்ய அனுமதிக்குமாறு ஹிந்து பெண்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் வீடியோ பதிவுடன் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. ஆய்வில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே, கள ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மசூதி தரப்பு மனு தாக்கல் செய்தது.
அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை வாராணாசி மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.