கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஏன்? – ஜி.கே.வாசன் கேள்வி

திமுக ஆட்சியில் மட்டும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வது ஏன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமாகாவின் 8-ஆம் ஆண்டு…

திமுக ஆட்சியில் மட்டும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வது ஏன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமாகாவின் 8-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது, திமுக ஆட்சியில் மட்டும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக விழாவில் பேசிய ஜி.கே.வாசன், கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.