நாட்டை உலுக்கிய Qnet தங்கக்காசு மோசடி விவகாரம் – சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை

நாட்டை உலுக்கிய Qnet தங்கக்காசு மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு ஹாங்காங்கை தலைமை இடமாகக் கொண்ட Qnet என்ற நிறுவனம் இந்தியாவில் விஹான் டேரக்ட்…

நாட்டை உலுக்கிய Qnet தங்கக்காசு மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2008-ம் ஆண்டு ஹாங்காங்கை தலைமை இடமாகக் கொண்ட Qnet என்ற நிறுவனம் இந்தியாவில் விஹான் டேரக்ட் செல்லிங்க் நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் முதலீடுகளை திரட்டியது.

எம்எல்எம் என்ற முறைப்படி பணத்தை வசூல் செய்து, மோசடியில் ஈடுபட்டது. இதில் முக்கிய பங்குதாரராக செயல்பட்டு சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்த பெண் தொழிலதிபர் பத்மா வீராச்சாமி கைது செய்யப்பட்டு சொத்துக்கள் சிபிசிஐடி-யால் முடக்கப்பட்டது. அமலாக்கத்துறை இதுவரை 150 கோடி ரூபாய் சொத்துக்களை மோசடி நிறுவனம் மற்றும் நிர்வாகிகளிடம் முடக்கியுள்ளது.

கடந்த 14 வருடமாக பல்வேறு விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த மோசடி தொடர்பாக தற்போது அமலாக்கத்துறை மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வகையில், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் பத்மா வீராச்சாமிக்கு சொந்தமான சொகுசு வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.