கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022 – சில சுவாரஸ்சிய தகவல்கள்!

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிறது. இந்த தொடரின் திகட்டாத சுவாரஸ்யங்கள் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம். உலகின் முன்னணி விளையாட்டுகளில் ஒன்றான கால்பந்து விளையாட்டின் மீதான ரசிகர்களின்…

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிறது. இந்த தொடரின் திகட்டாத சுவாரஸ்யங்கள் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகின் முன்னணி விளையாட்டுகளில் ஒன்றான கால்பந்து விளையாட்டின் மீதான ரசிகர்களின் ஆர்வம் பெரியதாகும். என்னதான் கிரிக்கெட், டென்னிஸ், கூடைப்பந்து என உலகில் பல முன்னணி விளையாட்டுகள் இருந்தாலும், உலகெங்கிலும் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள ஒரே விளையாட்டு கால்பந்து விளையாட்டு தான்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022 இந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த போட்டிகள் இம்முறை மேற்காசிய நாடுகளில் ஒன்றான, வடகிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த கத்தார் உலகக் கோப்பை தொடரில் பல சுவாரஸ்சியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

வரலாற்றில் முதன்முறையாக உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்ற முதல் இஸ்லாமிய நாடு என்ற பெருமையை கத்தார் பெற்றுள்ளது. உலகக் கோப்பையை நடத்தும் 2வது ஆசிய நாடு என்ற பெருமையையும் கத்தார் பெற்றுள்ளது.

வழக்கமாக உலகக்கோப்பை போட்டிகள், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலேயே நடைபெறும். ஆனால் முதன்முறையாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கத்தாரில் வெப்ப அலைகள் பரவும் என்பதால் போட்டி அட்டவணையையே அதற்கேற்றாற்போல் ஃபிஃபா அமைப்பு மாற்றியுள்ளது.

1963-ம் ஆண்டு ஃபிஃபாவின் அங்கீகாரம் பெற்ற கத்தார், ஒருமுறை கூட கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றதே இல்லை. இந்த முறை போட்டிகளை நடத்துவதால் முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டும் இன்றி, இதுவரை உலக கோப்பைகளை நடத்திய நாடுகளிலேயே சிறிய நாடாக கத்தார் அமைந்துள்ளது.

இந்த உலக கோப்பை தொடரை நடத்துவதற்காகவே 8 பிரம்மாண்ட கால்பந்து அரங்கங்களை கத்தார் மேம்படுத்தி உள்ளது. இதில் 7 கால்பந்து மைதானங்கள் புதிதாக கட்டமைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். இதுவரை நடைபெற்ற உலக கோப்பை தொடர்களிலேயே குறைந்த நாட்களில் நடத்தி முடிக்கப்படும் தொடரும் இதுவேயாகும்.

கத்தார் நாட்டிற்கு போட்டியை காண 15 கோடி பேர் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிகழும் பட்சத்தில், இதுவரை நடைபெற்ற தொடர்களிலேயே அதிக பார்வையாளர்கள் பங்கேற்ற தொடராகவும் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடர் மாறும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.