பொதுப்பணித் துறை சார்ந்த டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் 108 கோடி ரூபாய் மதிப்பில், டைடல் பார்க் சந்திப்பில் நடைபெற்று வரும் U வடிவ பாலம், இந்திரா நகர் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பெருங்குடி மற்றும் கலைஞர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து செய்தியா ளர்களை சந்தித்த அவர், பொதுப்பணித் துறை சார்ந்த டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என்று தெரிவித்தார்.







