யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம், உக்ரைன் அணிகள் வெற்றி!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் உக்ரைன், பெல்ஜியம் அணிகள் வெற்றிபெற்றன. முதலாவதாக நடைபெற்ற போட்டியில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள வடக்கு மாசிடோனியா, உக்ரைன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக…

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் உக்ரைன், பெல்ஜியம் அணிகள் வெற்றிபெற்றன.

முதலாவதாக நடைபெற்ற போட்டியில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள வடக்கு மாசிடோனியா, உக்ரைன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், உக்ரைன் அணியின் ஆன்ட்ரி எர்மாலன்கோ 29-வது நிமிடத்திலும், ரோமன் யாரெம்சக் 34-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 83-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை உக்ரைன் வீரர் ருஸ்லன் வீணாக்கினார். எனினும், இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் உக்ரைன் அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் தனது முதல் வெற்றியை உக்ரைன் அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல் நடந்த பி பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது. போட்டி தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே டென்மார்க் அணி ஒரு கோல் அடித்தாலும், பெல்ஜியம் அணியின் ஹசார்ட் மற்றும் கெவின் டி புருனே ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால், இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி தனது வெற்றியை பதிவு செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.