தொடர்ந்து 10வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி : வரலாற்றுச் சாதனை படைத்தார் நினோ சலுக்வாட்ஸே.!

வரலாற்றிலேயே தொடர்ந்து 10 வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் ஒரே பெண் என்ற சாதனையை ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நினோ சலுக்வாட்ஸே படைத்துள்ளார். நினோ சலுக்வாட்ஸே  ஜார்ஜிய நாட்டைச் சார்ந்த துப்பாக்கி…

வரலாற்றிலேயே தொடர்ந்து 10 வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் ஒரே பெண் என்ற சாதனையை ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நினோ சலுக்வாட்ஸே படைத்துள்ளார்.

நினோ சலுக்வாட்ஸே  ஜார்ஜிய நாட்டைச் சார்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். இவர் 1988ம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் முதன்முறையாக போட்டியிட்டார். அப்போது அவருக்கு வயது 19. மேலும் இந்த  பெண்களுக்கான 25 மீட்டர் ஸ்போர்ட்டிங் பிஸ்டல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து 2008ம் ஆண்டு மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கங்களை பெற்றார். இவர் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையாக சுமார் 40 ஆண்டுகளாக விளையாடிவரும் சலுக்வாட்ஸே, தனது 54வது வயதிலும் 2024 ஒலிம்பிக் தொடருக்கு தற்போது தகுதி பெற்றுள்ளார். இவர் இதுவரை மூன்று ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் 10வது முறையாக தகுதிபெற்றது குறித்து நினோ சலுக்வாட்ஸே “துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்வது வயது சார்ந்ததைத் தாண்டி, மனதளவில் திடமாக இருத்தல் முக்கியம். கையில் துப்பாக்கியை பிடித்து சுடுவது முக்கியமே தவிர, உடல் உழைப்பு பெரிதும் தேவையில்லை.” என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.