புரட்டாசி சனிக்கிழமை – பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையினர்..!

புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்குப் பக்தர்கள் பெருமளவில் வருகை தருவது வழக்கம். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமைகளில்…

புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்குப் பக்தர்கள் பெருமளவில் வருகை தருவது வழக்கம். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அதுவும் மற்ற வைணவத் தலங்களைவிடச் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பக்தர்கள் அதிகமாக வருவார்கள்.

நீண்ட நேரம் வரிசையில் நின்று பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு ‘உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை’ சார்பில் ஆண்டுதோறும் பிரசாதம் வழங்குவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமையான இன்று தரிசனம் செய்த பக்தர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை சாதம், தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

காலை நடை திறந்ததில் தொடங்கி நள்ளிரவு நடை சாத்தும் வரை நாள் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் நிர்வாகி பி.கே.பாபு, அவருடன் ராஜ்குமார், நரேஷ், பிரகாஷ், ஆனந்தன், மணிகண்டன், ஸ்ரீ கணேஷ் உள்படப் பலர் பக்தர்களுக்குப் பிரசாதங்களை வழங்கி மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.