உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதற்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி கருப்பட்டிக்கு அரசு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் உடன்குடி கருப்பட்டிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
இதற்கு உடன்குடி பகுதி பனைத்தொழில் விவசாயிகள் மற்றும் கருப்பட்டி வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆள் பற்றாக்குறை, கடும் வறட்சி காரணமாக பனைத்தொழில் நலிவடைந்து வரும் நிலையில், அரசின் அறிவிப்பு பனைத்தொழில் மேம்படுத்தும் என பனை விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.







