பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் ஒரு வருடத்துக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து, ஊரடங்கு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக தொற்று குறைந்துள்ள மாநிலங்களில், பள்ளிகளை திறக்க அம்மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அதன்படி சில மாநிலங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இப்போது உத்தராகண்ட், பஞ்சாப், சத்தீஸ்கர் உட்பட சில மாநிலங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப்பில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து ஒரு வருடத்துக்குப் பிறகு பள்ளி கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவர்கள் முக கவசம் அணிந்து, பள்ளிகளுக்கு ஆர்வமுடன் சென்றனர்.
அமிர்தசரஸில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் பிரின்சிபிள் மன்தீப் கவுர் கூறும்போது, அனைத்து வகுப்புகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறை கள், முறையாக பின்பற்றப்படுகின்றன என்றார்.








