உலகின் மிக நீளமான தலைமுடியால் கின்னஸ் சாதனை புரிந்த நிலாஷினி பட்டேல் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முடி வெட்டிகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத்தின் மொடாசா நகரத்தைச் சேர்ந்தவர் நிலாஷினி பட்டேல். 18 வயதான இவர் 18 வயதுக்கு உட்பட்டவர்களின் பட்டியலில் உலகின் மிக நீளமான தலைமுடி கொண்டவர் என இதுவரை மூன்று முறை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று உலக சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் கடந்த 2020 ஜூலை மாதம் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை போட்டியில் தனது 200 செ.மீ. (6 அடி) நீளமுள்ள தலைமுடிக்காக மூன்றாவது முறையாக கின்னஸ் புத்தகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதேபோல் 2018,2019-ம் ஆண்டுகளிலும் சாதனை புரிந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுவாகவே பெண்களுக்குத் தலைமுடி என்றாலே ஒரு தனி விருப்பம் இருக்கும். ஆனால் அதைப் பேணிப் பாதுகாப்பது பெரும் சாவாலாகவே உள்ளது. ஆனால் இச்சிறு வயதில் நிலாஷினி பட்டேல் இந்த சாதனை புரிந்தது பலருக்கும் வியப்பாகவே உள்ளது.
தற்போது நிலாஷினி தனது கூந்தலுக்குப் பிரியா விடை கொடுக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து நிலாஷினி கூறுகையில், “நான் எனது 6-ம் வயதிலிருந்து தலைமுடியை வெட்டாமல் வளர்த்துவருகிறேன். 12 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் முதல்முறையாக முடிதிருத்தம் செய்யப்போகிறேன். என் வாழ்வில் எனக்கு ஒரு மாற்றம் தேவைபடுகிறது. என் புதுமையான தோற்றத்தைக் காண ஆவலாக உள்ளேன்” என்றார்.
ஆறு அடி கூந்தலை வெட்டிய நிலாஷினி தனது தலைமுடியை அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்துள்ளார். பின்பு தனது புதிய ஹேர் ஸ்டைலைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.