பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. நீண்ட நாட்களாக மாநிலத்தின் முதலமைச்சராக…

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. நீண்ட நாட்களாக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனிடையே காங்கிரஸ் மாநில தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாதது காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் தலைவலியாக மாறியது. இதனிடையே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் காங்கிரஸ் தலைவர் சித்து அறிவித்தார்.

இதனால், அதிருப்தியடைந்த அமரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர் சிங், 3-வது முறையாக தான் அவமானப்படுத்தப்பட்டதாக கூறினார். காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன் என தெரிவித்த அவர், மேலிடத்தின் விருப்பப்படி, யாரை வேண்டுமானாலும் முதலமைச்சராக நியமித்துக் கொள்ளட்டும் என தெரிவித்தார்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.