முக்கியச் செய்திகள் தமிழகம்

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதே போன்று, நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!

Gayathri Venkatesan

கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

Ezhilarasan

இடம் மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள்!

Halley karthi