சிறுவனை முட்டிய மாடு; வெளியானது சிசிடிவி காட்சி

சென்னை அம்பத்தூரில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சிறுவனை, பசுமாடு ஆவேசமாக முட்டித்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது குடும்பத்துடன் வெளியே செல்ல தயாராகி…

சென்னை அம்பத்தூரில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சிறுவனை, பசுமாடு ஆவேசமாக முட்டித்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது குடும்பத்துடன் வெளியே செல்ல தயாராகி கொண்டிருந்தார். அப்போது அவரது நான்கு வயது மகன் சரத், தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான். திடீரென அந்த சாலையில் சென்ற ஒரு பசுமாடு சிறுவனை ஆவேசமாக முட்டி தாக்கியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் பசுமாட்டை விரட்டி, சிறுவனை மீட்டனர்.

மீண்டும் அந்த மாடு சிறுவனையும் அவனது பாட்டியையும் முட்டத்தொடங்கியது. தினேஷ் உடனடியாக மாட்டை விரட்டினார். உடனடியாக சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இந்தபகுதியில் மாடுகள் அவ்வப்போது வெளியில் சுற்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக அம்பத்தூர் மாநகராட்சியில் புகாரளித்தும் இதுவரை இந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.