இணையதளம் மூலம் சுவர் கடிகாரத்தின் டயல்களை உருவாக்க கற்றுக்கொண்ட இந்தியரின் படைப்புகள் அமெரிக்காவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பூனேவை சேர்ந்தவர் யோகேஷ் லிலி. இவர் சுவர் கடிகாரத்தின் டயல்களை செய்பவர். இணையதளத்தின் மூலமாக இவர் கடிகாரத்தின் டயல்களை செய்யக் கற்றுக்கொண்டுள்ளார். சர்வதேச அளவில் கடிகாரம் மற்றும் கடிகாரத்தைச் சேமிக்கும் சங்கம் சார்பாக, யோகேஷ் லிலியின் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
இந்த கண்காட்சியானது, அமெரிக்காவில் நடைபெற்றது.

இதுதொடர்பாக யோகேஷ் லிலி கூறுகையில் ‘இணையதளம் மூலமாகக் சுவர் கடிகாரத்தின் டயல்களை உருவாக்கக் கற்றுக்கொண்டேன். ஒரு தரம் வாய்ந்த சுவர் கடிகாரத்தை உருவாக்க இரண்டு வருடங்கள் ஆகின. 1890-1970 காலகட்டத்தில் உள்ள கடிகாரத்தின் டயல்களை நான் உருவாக்கி உள்ளேன்’ என்று அவர் கூறியுள்ளார்.







