முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு; கொறடாவாகிறார் எஸ்.பி.வேலுமணி!

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவில் ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் தற்போது, எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதையடுத்து இந்த முரண்களுக்கு கட்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்ட நிலையில் தேனியில் ஓபிஎஸ்-ஐ முன்னிறுத்தும் வகையில் போஸ்டர்கள் பல ஒட்டப்பட்டிருந்தன. இது கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் ஒருங்கிணைப்பாளருக்கும் இடையே உள்ள கருத்து வேறுப்பட்டினை உறுதிப்படுத்தியது.

ஏற்கெனவே எம்எல்ஏக்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தனியாக நடத்தியது கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை பெற ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவியது. கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இரு குழுக்களாக பிரிந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கொறடாவாக எஸ்.பி வேலுமணியும், துணை கொறடாவாக க.ரவியும், பொருளாளராக கடம்பூர் ராஜூவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். செயலாளர் மற்றும் துணை செயலாளர் பொறுப்புகளுக்கு கே.பி.அன்பழகன் மற்றும் மனோஜ் பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதமாற்றத்திற்கு எதிராக, மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்துவோம்: ஹெச்.ராஜா

Arivazhagan Chinnasamy

கால்பந்து வீரர் ரொனால்டோவின் குழந்தை திடீர் மரணம்

G SaravanaKumar

”மின்உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி”

Halley Karthik