புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் – சீறிப் பாய்ந்த காளைகளை கண்டுரசித்த பொதுமக்கள்!

புதுக்கோட்டை திருமயத்தை அடுத்த மாவூர் ஸ்ரீசோலை பிராட்டி அம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை கரவொலி எழுப்பி பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டுரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த…

புதுக்கோட்டை திருமயத்தை அடுத்த மாவூர் ஸ்ரீசோலை பிராட்டி அம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை கரவொலி எழுப்பி பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டுரசித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த மாவூரில் ஸ்ரீ சோலை பிராட்டி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

போட்டியில் கலந்து கொள்வதற்கென புதுக்கோட்டை மட்டுமின்றி மதுரை, தேனி, சிவகங்கை என பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் வந்திருந்தன. போட்டியானது சிறியமாடு,பெரிய மாடு என இரு பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பிரிவில் 8ஜோடி மாடுகளும்,சிறிய மாட்டு
வண்டி பிரிவில் 15ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன.

பெரிய மாட்டு வண்டி பிரிவிற்கு 12கிமீ தூரமும், சிறிய மாட்டு வண்டி பிரிவிற்கு 9கிமீ
தூரமும் எல்லையாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டியின் எல்லையை நோக்கி பாய்ச்சலுடன் துள்ளிச் சென்ற மாடுகளை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான மக்கள் உற்சாகம் பொங்க ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். போட்டியின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.