கண்ணமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆர்வமுடன் பேசிக் கொண்டிருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை திடீரென மயங்கி விழுந்ததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சியடந்தனர்.
திருவண்ணாமலை ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான இன்று மாணவர்கள் ஒன்று கூடி இறைவணக்கம் செய்தனர்.
சென்ற கல்வி ஆண்டில் சிறப்பாக தேர்ச்சி அடைந்த மாணவிகளுக்கு பரிசுகளையும் பாராட்டைகளையும் வழங்கி , வரும் கல்வி ஆண்டில் 100% தேர்ச்சி பெற அனைத்து மாணவிகளும் பள்ளி ஆசிரியர்களும் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை பத்மஜா விழிப்புணர்வு குறித்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி பேச்சு மூச்சு அற்று தலைமையாசிரியர் பத்மஜா இருக்கையில் சாய்ந்தார்.இதனை கண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரம் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்த தலைமையாசிரியரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்
பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியுடன்
பள்ளி திறப்பு குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தபோது அரசு பள்ளி தலைமை ஆசிரியை மயங்கி விழுந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.








