புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 99.9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன்
மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றிலும் மரம் செடி கொடிகள் குளங்கள் நிரம்பிய வனப்பகுதியாகும்.
இந்நிலையில் இதன் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து
தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், உடனடியாக பச்சை இலை
தலைகளை கொண்டு, தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இருந்தும் காற்றின்
வேகம் காரணமாக தீ அதிக அளவு பரவ தொடங்கியது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை கொண்டு போராடித் தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெ. வீரம்மாதேவி
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 99.9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. மாவட்ட…






