புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்!

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள்…

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தாக்கியதால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

நேற்று முதல்வருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் இன்றும் தொடர்கிறது. பணிப் பாதுகாப்பு இல்லை மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியிலிருந்து நீக்கப்பட்ட 8 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வெளியூர் செல்லும் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.