இலங்கையில் பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
ஜூன் 26 அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 50 ரூபாயும், ஒரு லிட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 100 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு லிட்டர் ஒடோ டீசலின் விலை 60 ரூபாயும், ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலை 75 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்படி, ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் புதிய விலைப்படி 470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் புதிய விலைப்படி 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் ஒடோ டீசலின் புதிய விலைப்படி 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். ஒரு லிட்டர் சூப்பர் டீசல் புதிய விலைப்படி 520 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப, லங்கா IOC நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
-ம.பவித்ரா