ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கிமீ தூரம் செல்லும் மின்சார பேட்டரியை உருவாக்குவதாகச் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் முன்னணி ஆட்டோமோட்டிவ் லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்பாளரான கன்டெம்பரரி ஆம்பெரெக்ஸ் டெக்னாலஜி கோ லிமிடெட் (சிஏடிஎல்) ஒரு புதிய பேட்டரியை உருவாக்குவதாக தெரிவித்துள்ளது. இது மின்சார வாகனங்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கிமீக்கு மேல் ஓட்டும் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
அண்மைச் செய்தி: ‘உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி; மத்திய அமைச்சர் பங்கேற்பு’
செல்-டு-பேக் (CTP) தொழில்நுட்பத்துடன், Qilin அல்லது CTP 3.0 பேட்டரி எனப் பெயரிடப்பட்ட பேட்டரி, 72 சதவிகிதம் வால்யூம் பயன்பாட்டுத் திறன் மற்றும் 255 Wh/kg வரை ஆற்றல் அடர்த்தியை மும்மை பேட்டரி அமைப்புகளுக்கு வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. CATL இன் படி, இது உலகின் மிக உயர்ந்த ஒருங்கிணைப்பு நிலையாக உள்ளதாகவும், சீன புராணங்களில் ‘கிலின்’ என்ற பழம்பெரும் உயிரினத்தின் நினைவாக பேட்டரிக்கு பெயரிடப்பட்டுள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
CATL படி, கிலின் பேட்டரிகள் 2023-ல் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி வெப்ப நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் கொண்டுள்ளதாகவும், சார்ஜ் செய்ய 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது








