புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 147 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 147 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,17,787 ஆக உள்ளது.
தற்போது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 2,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,13,920 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,760ஆக உயர்ந்துள்ளது.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







