தமிழ் மொழியை கற்க முடியாதது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி பேச்சு!

உலகின் மிகவும் பழமைவாயந்த தமிழ் மொழியை தாம் கற்கமுடியாதது நீண்டநாள் வருத்தம் என பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மன் கீ பாத் உரையில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 74ஆவது மன் கீ…

உலகின் மிகவும் பழமைவாயந்த தமிழ் மொழியை தாம் கற்கமுடியாதது நீண்டநாள் வருத்தம் என பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மன் கீ பாத் உரையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 74ஆவது மன் கீ பாத் நிகழ்ச்சியில் தமிழகத்தின் சிறப்புகளையும், தமிழ் மொழியின் பெருமையை குறித்தும் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது “உலகின் ஒவ்வொரு சமூகத்திலும் நதியைப் பொருத்து பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் உள்ளது பல நாகரிகங்கள் நதிக்கரையில்தான் உருவாகின. நமது கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்பதால் நதிநீர் நமது வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாததாக உள்ளது.

பழம்பெரும் தமிழ் மொழியின் இலக்கிய வளம் மிகவும் அற்புதமானது. இந்த பெருமைமிகு தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கிணற்று நீரைப் புதுப்பிக்கும் பணிகளில் அந்த மாவட்ட மக்களே ஈடுபட்டிருக்கின்றனர்.

பின்னர் முன்பு ஒருமுறை நேயர் ஒருவர், பிரதமரிடம் தமது நீண்ட நெடிய நாள் அரசிய வாழ்வில் ஏதேனும் பெரிய வருத்தம் இருக்கிறதா எனக் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், உலகின் மிகவும் பழமைவாயந்த தமிழ் மொழியை தாம் கற்க முடியாதது வருத்தம் அளிப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.