முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021

புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் : நாராயணசாமி

புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் 6 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது, காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இரவு 11 மணிக்கு முடிவடைந்தது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளையும் கைப்பற்றியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதியிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளது.

தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சரும் என். ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி ஒரு தொகுதியில் (ஏனாம்) தோல்வி அடைந்துள்ளார். 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவைப்படும் நிலையில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்து தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என நாராயணசாமி தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலைவணங்குகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கோயில்கள் சார்பாக 14 ம் தேதி வரை 1 லட்சம் உணவுப்பொட்டலங்கள்: அமைச்சர் சேகர்பாபு

Halley Karthik

பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசி: டி.ஆர் பாலு

நாடகமாடி 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது

Gayathri Venkatesan